கல்லூரிக் கீதம்
ஈழ நாட்டின் கீழ்த் திசையில்
எழில் மலிந்த துறைமுகம்
ஈசனுறையும் கோணமலை
எங்கும் இசை மலிந்தது
வாழுமக்கள் கல்வி செல்வம்
வகையினெய்தி வாழவே
வகுத்த கல்வி முறையில் நல்கி
வைப்பதெங்கள் பள்ளியே.
எங்கள் பள்ளி கலையின் தெய்வம்
இனிதமைந்த தாயகம்
ஈழநாட்டின் சமயமெல்லாம்
இருக்கும் சைவப் பேடகம்
மங்களம் சேர் சிறுவா்ள நாங்கள்
வண்ணப்பாடல் பாடியே
மயில்கள் போல ஆடி மகிழும்
வடிவமைந்த பீடகம்.
கைத்தொழில்கள் கமத்தொழில்கள்
காட்டிச் செல்வம் கூட்டியே
கலைகளெல்லாம் புதிய முறையில்
கற்பித்தெம்மை ஏத்திடும்
இத்திறத்தில் வளம்பெருக்கி
எம்மை நல்கும் சண்முக
வித்தியாசாலைக்கு வாழ்த்து
விரும்பி நாமும் கூறுவோம்.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வென்று வாழ்த்துவோம்
வந்தனங்கள் சொல்லி நீடு
வாழ்கவென்று வாழ்த்துவோம்
தாழ்மையோடு பாலரெல்லாம்
தாழ்ந்து தெய்வம் போற்றியே
தங்கம்மாளின் தருமத் தொண்டு
தரணி போற்ற வாழ்த்துவோம்.
ஆக்கம் - சுன்னாகம் குமாரசுவாமிப் புலவா் (1951)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக