பக்கங்கள்

திங்கள், 31 டிசம்பர், 2012

Short Introduction to the College


The Premier Institution Providing Education Enriched with Hindu Traditions
We member with gratitude Our Great Founder
MRS. THANGAMMA SHANMUGAMPILLAI
Who utilized her own resources to foster Education for Hindu Girls in Trincomalee



Name                                         :  T/ Sri Shanmuga Hindu Ladies' College

Logo                                          :      
                                             
Founded                                    : 20th October 1923

Founder                                     : Mrs. Thangamma Shanmugampillai

School No                                  : 29181

School ID                                   : 17010074

Census No                                  : 16054

First Principal                             : Mrs. Bawani Narayanan

College Status                             : June 1994

Elevated as National School        : 06.05.1996

Present Grade                             : 1AB

Category                                     : National School

Founder's Day                            : 02nd May

College Day                               : 20th October

School Colors                            : Blue & Yellow

Web                                          : trincoshanmuga.sch.lk

e Mail                                       : sshlc@sltnet.lk
                                                  trincoshanmuga@gmail.com

Blogger                                    : trincoshanmuga.blogspot.com


கல்லூரிக் கீதம்

ஈழ நாட்டின் கீழ்த் திசையில்
எழில் மலிந்த துறைமுகம்
ஈசனுறையும் கோணமலை
எங்கும் இசை மலிந்தது
வாழுமக்கள் கல்வி செல்வம்
வகையினெய்தி வாழவே
வகுத்த கல்வி முறையில் நல்கி
வைப்பதெங்கள் பள்ளியே.


எங்கள் பள்ளி கலையின் தெய்வம்
இனிதமைந்த தாயகம்
ஈழநாட்டின் சமயமெல்லாம்
இருக்கும் சைவப் பேடகம்
மங்களம் சேர் சிறுவா்ள நாங்கள்
வண்ணப்பாடல் பாடியே
மயில்கள் போல ஆடி மகிழும்
வடிவமைந்த பீடகம்.


கைத்தொழில்கள் கமத்தொழில்கள்
காட்டிச் செல்வம் கூட்டியே
கலைகளெல்லாம் புதிய முறையில்
கற்பித்தெம்மை ஏத்திடும்
இத்திறத்தில் வளம்பெருக்கி
எம்மை நல்கும் சண்முக
வித்தியாசாலைக்கு வாழ்த்து
விரும்பி நாமும் கூறுவோம்.


வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வென்று வாழ்த்துவோம்
வந்தனங்கள் சொல்லி நீடு
வாழ்கவென்று வாழ்த்துவோம்
தாழ்மையோடு பாலரெல்லாம்
தாழ்ந்து தெய்வம் போற்றியே
தங்கம்மாளின் தருமத் தொண்டு 
தரணி போற்ற வாழ்த்துவோம்.

ஆக்கம் - சுன்னாகம் குமாரசுவாமிப் புலவா் (1951)



MISSION

Assuring concerted dedication of service in pursuance of quality Education through implementation of modern techniques, reforms and ideas


பணிக்கூற்று

நவீன நுட்பங்கள், சீா்திருத்தங்கள், சிந்தனைகள் என்பவற்றை அமுல்படுத்துவதன் ஊடாக தரமான கல்வியை அளிப்பதற்கு இடையறாத சேவையை அா்ப்பணித்தல்



VISION

Integrating teaching, research and service to impart Quality Education

நோக்கு

கற்பித்தல், ஆய்வு, சேவை என்பவற்றை ஒருங்கிணைத்து தரமான கல்வியை அளித்தல்



MOTTO

Awake, arise and stop not till the goal is reached


மகுடவாசகம்

விழிமின், எழுமின் இலக்கை அடையும் வரை உழைமின்



ஞாயிறு, 30 டிசம்பர், 2012

Shanmugas' Oath

We will protect the noble ideals of the college in Unity, Purity and Divinity and strive unceasingly to achieve the noble aspiration of the great founder. We will obey the rules and regulations of the college and act with sense of duty and purity of mind. We will reverently cherish the untiring efforts of the pillars of the institution who strive for the glory of our school. We will endeavor and strive continuously to uplift the standard, fame and beauty of our existing noble institution. 



சண்முகாவின் சத்தியவாசகம்

ஐக்கியம், புனிதம் ஆன்மீகம் என்பவை உள்ளடங்கிய பெருமைக்குரிய கல்லூரித் தாபகரின் உயா்ந்த இலட்சியங்களை தொடா்ந்து பாதுகாப்போம். கல்லூரியின் விதிகளுக்கு கீ்ழ்படிந்து என்றும் கடமையுணா்வுடனும் இதயசுத்தியுடனும் இயங்குவோம். கல்லூரியின் வளா்ச்சியில் அா்ப்பணிப்புடன் ஈடுபட்ட அனைவரையும் நிரந்தரமாய் நினைவிலிருத்துவோம். எமது சிறப்புமிக்க இக் கல்லூரியின் தரத்தையும், வனப்பையும், புகழையும் உயா்த்துவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் இடையறா முயற்சியுடன் முன்னெடுத்து முனைப்புடன் செயற்படுவோம்.